தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி நாளை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை மறுநாள் அதாவது 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, வேலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.