
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் விஜயின் கூட்டணி ஆட்சி கருத்தை ஆதரிப்பதாகவும் வரவேற்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை நான் வரவேற்கும் நிலையில் புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை எனவும் அரசியலுக்கு வந்ததால் அவர் நிறைய துரோகங்களையும் ஏற்ற இறக்கங்களையும் சந்திப்பார். அவர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஒரு நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ளட்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டிகள் நிலவுகிறது.
அதன்பிறகு தற்போதைக்கு கூட்டணி குறித்து சாத்திய கூறுகள் இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். அதே சமயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சொன்னது போன்று 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் முன்னதாக விஜய் மற்றும் திரிஷா தனி விமானத்தில் சென்ற புகைப்படம் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை எடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.