
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் 22 மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.