
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் 44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாகனம், பேட்டரி தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நாட்டிலேயே முதல்முறையாக 18000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.