பொதுவாக பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் பொங்கல், தைப்பூசம் உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டியையின் போது திருவள்ளூர் தினமான ஜன.16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தைப்பூசம் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ஆம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.