தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோன்று வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.