தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.