
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், எஸ்.சி.இ.ஆர்.டி பொறுப்பாளர்கள் போன்றோருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருக்கிறது. இதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்க வசதியாக பணிவிடுப்பு உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.