
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கூறலாம். தமிழக அரசு அதை பரிசீலித்து முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்