
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அந்த வகையில் நடபாண்டில் பிப்ரவரி 22ஆம் தேதி தேசிய வருவாய் வழி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
அதன்படி இந்த தேர்வில் வெற்றி பெற்றால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாதந்தோறும் மத்திய அரசு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும். இந்த தேர்வுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.