தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலகத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் சில தனியார் நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மாக் ஊழல் தொடர்பாக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான அமைச்சர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேவையில்லாத பயத்தை முதல்வர் ஸ்டாலின் பரப்பி வருகிறார். அமலாக்கத்துறை கணக்கில் வராத ஆயிரம் கோடி ரூபாய் லஞ்ச பணம் தொடர்பான ஆவணங்களை மதுபான ஆலையிலிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. தங்களுடைய கஜானாவை நிரப்புவதற்காக திமுக அரசு மக்களை மோசடி செய்கிறது. இதற்கு மேலும் முதல்வராக தொடர ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா.? இதை அவர் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த மதுபான முறைகேடு தொடர்பாக வருகிற 17-ஆம் தேதி சென்னை எழும்பூரில் தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பொதுமக்கள் எங்களுடன் பெரும் அளவில் இணைந்திட வேண்டும். வருகிற 17-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் இருக்கும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும். மேலும் டாஸ்மாக் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,