சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல் சூரிய புயல் X கிளாஸ் வகை என்றும், மே 3 ஆம் தேதி அன்று ஏற்பட்ட சூரிய புயல் M கிளாஸ் வகையை சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இந்த ஆண்டு வெப்ப அலை சராசரியை விட அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.