கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பூப்பெய்திய மாணவி சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் வகுப்பறையில் அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை அந்த மாணவியின் தாயார் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த 7-ம் தேதி ஆண்டு இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்தபோது 8-ம் வகுப்பு மாணவிக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவியை வகுப்பறையில் தனியாக அமர வைக்காமல் வெளியே அமர வைத்ததாக தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.