
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் பார்ப்பதற்கு சிறுமி போன்ற இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கு 16 வயது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் அந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தது தெரிய வந்தது.
இந்த சிறுமி அந்த பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற 22 வயது வாலிபரை காதலித்துள்ளார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் சிறுமிக்கும் அந்த வாலிபருக்கும் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்த நிலையில் திடீரென கர்ப்பமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.