தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரின் கட்சி கொடி மற்றும் பாடலுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். அந்த கொடியில் மேலும் கீழும் சிவப்பு நிறம் , நடுவில் மஞ்சை நிறம் அமைத்துள்ளது. அத்துடன் நடுவில் 2 பிளிறும் போர் யானைகள் இடம்பெற்றுள்ளது. வாகை பூ வெற்றி குறியாகவும், போர் யானைகள் வீரத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் முதல் பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.