தமிழகம்  முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் தமிழக அரசு இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தற்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் மட்டும் சுமார் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதோடு பிற மாவட்டங்களில் 900 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் மழைக்காலங்களில் டெங்கு போன்ற கொசுக்களால் உருவாகும் காய்ச்சல் பரவும் என்பதால் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர்  கேட்டுக் கொண்டுள்ளார்.