தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 10 நாட்களில் தமிழகத்தில் 500 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலோடு நிமோனியா காய்ச்சலும் பரவி வரும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது.