
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ள சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது.