
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகரம் முதல் கிராம பகுதி வரை தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மாநிலம் முழுவதும் சராசரியாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் நாய் கடி பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நாய் கடி சம்பவங்கள் குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 66,132 , வேலூரில் 51 ஆயிரத்து 544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நாய்க்கடி மருந்துகளை கையிருப்பு வைக்கவும் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறைக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.