தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தி ஜயந்தி, நவம்பர்-1 உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.