தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்படும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.