
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் பொங்கலும் 15ஆம் தேதி வருவதால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் சிறப்பு தொகை ஒரே நேரத்தில் 2000 ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.