பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் 3500 வகுப்பறைகள் தேவைப்படும் இடங்களில் கட்டப்படும்.

மேலும் அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு  நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேர காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதோடு தமிழகம்  முழுவதும் மாவட்ட வாரியாக கணக்கெடுத்து தேவைப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களை  நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரசு பள்ளிகளுக்கு கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.