
தமிழகம் முழுவதும் இனி ஆய்வுகளுக்குப் பின்பே திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரக்கோணம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இனி ஆய்வுகளுக்கு பின்பு தான் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.