
முகூர்த்தம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் மே ஐந்தாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து மதுரை, கடலூர், சிதம்பரம், கோவை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெரிசலை தவிர்க்க www.tnstc.in, https://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.