தமிழக முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஜெயச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் மீதான தாக்குதலை கண்டித்து இன்று ரேஷன் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.