தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பாரடுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். அதேசமயம் இனி வரும் நாட்களில் கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள ஏதுவாக கூட்டம் நடைபெற உள்ள இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த கூட்டத்தை மதசார்புள்ள இடங்களில் நடத்தக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி மூலம் உள்ளீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.