
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக காலை 8 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறும். இதில், ஆதார், ரேஷன் அட்டை போன்ற உரிய ஆவணங்களுடன் பங்கேற்கவும். இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு ரூ.5,00,000 வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம்.