தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் நான்கு வரை 1140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை, ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நெல்லை மற்றும் நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.