தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்யாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதனை முன்னிட்டு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இன்றி பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதால் இன்று  ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் நுகர்வோர் கட்டுப்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று  ஞாயிற்றுக்கிழமை இயங்கும். அதன்படி 24,610 முழு நேர கடைகள், 10,164 பகுதிநேர கடைகள் உட்பட 34, 744 கடைகள் செயல்படும். மேலும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.