தமிழகம் முழுவதும் இன்று  முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் எந்த பிரச்சினையும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதால்  அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ரேஷன் கடை ஊழியர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது