தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருக்கிறது. சுமார் 4700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இன்டர்நெட் சேவை வேண்டும் என்று மனு வந்துள்ளது.

அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து தேர்வு செய்யப்பட்டு பின்னர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் இணையதள சேவை வழங்கப்படும் என்று அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.