
தமிழக முழுவதும் மின்வாரியம் சார்பாக 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனால் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை மின்சார வாரியம் மேற்கொள்ள உள்ளது. அதற்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மின்வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மின்சார சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கோடை காலத்திற்குப் பிறகு இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.