பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை அதை வாங்குவோர் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பத்திரங்களில் பிழை இருப்பதாக கூறி மக்களை அலைக்கழிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை சார் பதிவாளர்கள் கடைபிடிப்பதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.