
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அவருடைய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தாஹிரா கண்டிப்பாக விஜய் பொதுமக்களை சென்று பார்ப்பார் என்று கூறியிருந்தார். அந்த வகையில் ஜனவரி மாதம் முதல் 234 தொகுதிகளுக்கும் விஜய் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்து தீர்மானங்களை நிறைவேற்றினார். தன்னுடைய கட்சி அலுவலகத்தில் வைத்து பொது மக்களுக்கு உதவிகள் செய்கிறார். அவர் தன்னுடைய முதல் மாநாட்டினை போன்று அரசியல் பயணமும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்கும் நிலையில் விவசாயம் மற்றும் அரசியல் கலந்த ஒரு படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் விஜய் அரசியலில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார். இந்த படத்தின் சூட்டிங் பிறகு ஜனவரி முதல் சூறாவளி பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.