தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய விசேஷ நாட்களில் மக்களின் வசதிக்காக பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் ஜூலை 12 நாளை கூடுதல் டோக்கன்களை விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 50 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ள பதிவு துறை மக்களிடமிருந்து வந்த கோரிக்கை அடிப்படையில் கூடுதல் டோக்கன்கள் நாளை விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளது.