தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது.

இந்நிலையில் இன்று 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் பள்ளி வேலை இறுதி நாள் ஏப்ரல் 30-ம் தேதி என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 30ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.