தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.