தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது . பேருந்து போக்குவரத்து இன்று வழக்கம் போலவே இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.