
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடு இன்றி பாமாயில் தரப்படுகிறது என கூறினார். மேலும் ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.