
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என கூறியுள்ள தமிழக அரசு, இந்த தடையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறுவோருக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.