
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்டு அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 நியாயவிலை கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அதாவது தமிழக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு சங்க தலைவர் அறிவித்துள்ளார்.