தமிழகம் முழுவதும், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், மே 2ஆம் தேதி தமிழகத்தின் மின்தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சம் எட்டியதாகக் கூறியுள்ளார். இதேபோல, மே 31ஆம் தேதி சென்னையில் 4,769 மெகா வாட் என்ற அதிகபட்ச மின் தேவை இருந்ததாகவும்  கூறியுள்ளார்.

மேலும் ஒன்றிய-மாநில அரசின் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் நகரங்களில் வீடு கட்ட ஒன்றிய அரசு ரூபாய் ஒன்றரை லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.12 முதல் ரூ.14 லட்சமும் நிதி தருகிறது என்று பேசியுள்ளார்.