பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்தது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு விரைவு அதிரடிப்படையின் குழு நிறுத்தப்பட்டது. இதனிடையே மருத்துவர்களின் அறிக்கை பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் இருக்கும் இலாக்காக்களை யாரிடம் ஒப்படைக்கலாம் என நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார். இதில் மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிடமும் மதுவிலக்கு துறையை அமைச்சர் பெரியசாமி இடமும் வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வெளியாகும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.