
தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் இலவசமாக வீடு கட்டுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரால் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுடைய பழங்குடியினர், எஸ்சி, எஸ்டி சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற வேண்டுமென்றால் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பராக இருக்க வேண்டும். நிலத்திற்கான வீட்டுமனை பட்டாவும் வைத்திருக்க வேண்டும். அதேபோல சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, முகவரி சான்று போன்றவற்றையும் வைத்திருக்க வேண்டும். இவர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள். மேலும் இது திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று இது குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.