
உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வந்த நிலையில் இன்று தமிழக அரசியலில் ஒரு பூகம்பமே வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது நேற்று தமிழகம் வந்த அமித்ஷா இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே டெல்லிக்கு சென்று அமித்சஷாவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்த நிலையில் தமிழகத்திற்கு வரும் அவரை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக முக்கிய தலைவர்களும் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பின் போது அதிமுக பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமித்ஷா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.
இதனால் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. அதேபோன்று இன்று பாஜக மாநில தலைவர் குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸையும் அமித்ஷா சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இன்று பாஜக, பாமக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியாகும் என்று கூறப்படும் நிலையில் நேற்று அன்புமணி ராமதாசை ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.
அதாவது பாமக கட்சியின் நிறுவனராக இருக்கும் நான் இனி தலைவராகவும் செயல்படுவேன் என்றும் அன்புமணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அறிவித்தார். அதாவது ஏற்கனவே அக்கா மகனுக்கு கட்சியின் பொறுப்பு கொடுப்பது தொடர்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ராமதாஸ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியதாக கூறப்படுகிறது.இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் இன்று வெளியாகும் கூட்டணி குறித்து அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.