
சென்னையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விழா அரங்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விஜய் பேசி வருகிறார் .
தமிழகத்தில் அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். நன்றாக படித்த மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், நாட்டில் நடக்கும் விஷயங்களில் உண்மை எது? பொய் எது? என்பதை கண்டறிய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.