தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜுவேட் அப்ரண்டீஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளது. 2020 முதல் 2023 வரை B.E, B.Tech படித்தவர்கள் வருகின்ற ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.