
தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்துகளில் 100% பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் அனைத்திலும் கூகுள் பே, போன் பே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றின் வாயிலாக டிக்கெட் பெறும் வசதி முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.