
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 5,699 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் தொகுப்பு அதிகம் வழங்கப்படும்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் வீதம் 11 மாதங்களுக்கு 125 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து நிதி ஒப்படைப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானிய குழு நியமித்துள்ள கல்வி தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.